இலங்கையில் மீண்டும் சுற்றுலாத்துறை நடவடிக்கைகளை ஆரம்பிக்க புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட்டுள்ளார்.
பயணப் பாதுகாப்பு கவச முறையில் 14 நாட்கள் கொண்ட தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த மற்றும் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றுக்கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கும், சுற்றுலாப் பயணிகளைக் கையாளும் ஹோட்டல்களுக்கு புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பயணப் பாதுகாப்பு கவச முறையில் 14 நாட்கள் கொண்ட தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்த மற்றும் இரண்டு தடுப்பூசி டோஸ்களையும் பெற்றுக்கொண்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டின் எந்தப் பகுதிக்கும் பயணிக்கலாம் என்று சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.
மேற்படி விதிகளைப் பூரணப்படுத்தும் சுற்றுலாப் பயணிகள் பயணப் பாதுகாப்பு கவச முறையில் இருந்து வெளியேறி, எந்தவொரு ஹோட்டலுக்கும் செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல்கள், மதுபானசாலைகள், பொது சேவைகளை சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்க முடியும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத அல்லது ஒரு தடுப்பூசியை மட்டும் பெற்றுக்கொண்ட பயணிகள் பயணப் பாதுகாப்பு கவச முறையின் ஊடாக பயணங்களை மேற்கொள்ளலாம்.
இலங்கையின் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதால், சுற்றுலாத்துறையை மீண்டும் இயக்கலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து அதிகளவான பயணிகளைக் கொண்டுவர விசேட தளர்வுகள் தேவை என்று சுற்றுலா சபை கேட்டுக்கொண்டுள்ளது.