இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய ஐநா விசேட அறிக்கையாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
ஏழு ஐநா விசேட அறிக்கையாளர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இதனைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு அமைய பயங்கரவாத தடைச் சட்டத்தை திருத்தியமைக்க
இந்த அறிக்கையில் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஆழ்ந்த கவலை வெளியிடப்பட்டுள்ளது.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குற்றச்சாட்டுக்கள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுபான்மையினர் மீதான வெறுப்புப் பேச்சு மற்றும் வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும் ஐநா அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.