January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இத்தாலி விஜயத்தில் பிரதமர் பாப்பரசரை சந்திக்கமாட்டார்-வெளிவிவகார அமைச்சு

பரிசுத்த பாப்பரசரை சந்திக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ எவ்வித கோரிக்கையையும் முன்வைக்கவில்லை எனவும் வத்திக்கானில் இருந்து அவ்வாறு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை எனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரதமரின் இத்தாலி விஜயம் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சர்வதேச மாநாடொன்றில் பிரதம உரையாற்றுவதற்காக பிரதமர் இத்தாலி செல்லவுள்ளதாக கடந்த 6 ஆம் திகதி தெளிவாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி,புதன்கிழமை (08) இரவு பிரதமர் உள்ளிட்ட குழுவினர் சர்வதேச மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி நோக்கி செல்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.