”தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது பகல் கனவே. எந்த கொம்பனாலும் அதனை அழிக்க முடியாது” என முன்னாள் வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று காலை நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுவரை நான் அடக்கி வாசித்தேன். இனினும் நான் அவ்வாறு இருக்க மாட்டேன் என்று அவர் அதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஒரு சிலரை தாக்குவதாக நினைத்துக்கொண்டு சிலர், தமிழரசுக் கட்சியை தாக்குகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது என்பது பகல் கனவே என்றும் அதனை எந்த கொம்பனாலும் அழிக்கவும் முடியாது என்று கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பங்காளி கட்சிகள் போகிறோம் என முடிவெடுத்தால் அதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால் அவர்கள் அவ்வாறான ஒரு முடிவை எடுக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன் என சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.