June 13, 2025 11:20:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் பயணமாகும் அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ யாழ். மாவட்டத்திற்கு நாளை கண்காணிப்பு பயணமொன்றை முன்னெடுக்கவுள்ளார்.

நாமல் ராஜபக்ஷ அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களை நேரில் கண்காணித்து, அவற்றை துரிதப்படுத்தும் நோக்கிலேயே யாழ்ப்பாணம் பயணமாகுவதாக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், அமைச்சரின் பயணத்தை முன்னிட்டு எவ்வித விசேட நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்படமாட்டாது.

கொவிட் 19 தொற்று நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியிலான அபிவிருத்தி செயற்பாடுகளை அரசாங்கம் தடையின்றி முன்னெடுத்து வருவதாக அமைச்சரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.