
பிராந்திய பாதுகாப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ள இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகளை இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பால்லே வரவேற்றுள்ளனர்.
“பிராந்தியத்தில் மிகப்பெரிய இராணுவ கூட்டுப் பயிற்சியான மித்ர சக்தி உள்ளிட்ட இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான வழிகள் குறித்து இலங்கை இராணுவ அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்துவதே இந்திய இராணுவ குழுவினர் நோக்கமாகும்”
என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.