File Photo
பலாங்கொடை பிரதேசத்தில் வீடொன்றில் வளர்க்கப்பட்ட நாயை திருடிச் சென்று 7,500 ரூபாவுக்கு அடகு வைத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் பலாங்கொடை – கிரிமெட்டிதென்ன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது லெப்ரடோர் வகையைச் சேர்ந்த குறித்த நாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட நபர்கள் நேற்று (07) பலாங்கொடை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.