January 29, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொட்டில் புடவையில் கழுத்து இறுகி 11 வயது சிறுமி மரணம்!

கேகாலை மாவட்டத்தின் தெரணியாகல, மாலிபொட தோட்டத்தில் தொட்டில் புடவையில் கழுத்து இறுகி, 11 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
இந்த சிறுமி சகோதரர்களுடன், தொட்டில் சீலையில் ஊஞ்சல் கட்டி விளையாடுவதை வழக்கமாக கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி குறித்த சிறுமி நேற்றைய தினம், அறையின் கதவை மூடிக்கொண்டு தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்ததாக அவரது தாயார் பொலிஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.

இவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சிறுமி, மிக நீண்டநேரம் வெளியில் வராததை அடுத்து, வீட்டின் யன்னல் ஊடாக பார்த்தபோது, சிறுமி தொட்டில் புடவையில் தொங்கிக் கொண்டிருந்ததை அவதானித்துள்ளார்.

அதன்பின்னர், சிறுமியின் சகோதரனை யன்னல் வழியாக அறைக்குள் அனுப்பி, கதவை திறந்து, சிறுமியை தெரணியாகல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது, சிறுமி உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக தெரணியாகல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.