இலங்கைக்கு சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 4200 ஒக்ஸிமீட்டர்களுடன் சந்தேகநபர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள சுங்க பிரிவினர் இந்த சட்டவிரோத ஒக்ஸிமீட்டர் தொகையை மீட்டுள்ளனர்.
இந்த ஒக்ஸிமீட்டர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து, இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கை ஒளடதக் கட்டுப்பாட்டு சபையின் அனுமதிச் சான்றிதழ் முன்வைக்கப்படவில்லை என்றும் சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளது.
23 இலட்சத்து 44 ஆயிரம் பெறுமதியான ஒக்ஸிமீட்டர்கள் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.