இலங்கையின் கொவிட் தடுப்பு செயலணியில் இருந்து இன்னொரு விசேட மருத்துவ நிபுணரும் விலகத் தீர்மானித்துள்ளார்.
கொவிட் தடுப்பு செயலணியில் இருந்து விசேட மருத்துவ நிபுணர் அஷோக குணரத்ன விலகத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொவிட் தடுப்பு செயலணி தனது முழுத் திறனையும் பயன்படுத்தவில்லை என்பதால் விலகத் தீர்மானித்ததாக அஷோக குணரத்ன தெரிவித்துள்ளார்.
விசேட மருத்துவ நிபுணர் அஷோக குணரத்ன கொவிட் தடுப்பு செயலணியில் 18 மாதங்கள் அளவில் அங்கம் வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேநேரம், ஏற்கனவே செயலணியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்த மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரமவை மீண்டும் இணைந்துகொள்ளும்படி சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.