January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் தெரிவு

உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக இலங்கையின் பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் இடம்பிடித்துள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட 2022 டைம்ஸ் தரவரிசையில் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு இந்த கௌரவம் கிடைத்துள்ளது.

இந்த தரவரிசைப்படி, பேராதனை பல்கலைக்கழகம் உலகின் முதல் 500 பல்கலைக்கழகங்களில் ஒன்றாக தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையின் பல்கலைக்கழக தரவரிசையில் முதலிடத்தையும் இப்பல்கலைக்கழகமே பெற்றுள்ளமை  விசேட அம்சமாகும்.

டைம்ஸ் உயர் கல்வி பல்கலைக்கழகங்கள் தரவரிசை என்பது உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களின் விரிவான பட்டியலாகும்.இது உலகின் உயர்கல்வி நிறுவனங்களின் ஆராய்ச்சிப் பணிகளை மதிப்பீடு செய்கிறது.

உலகில் உள்ள 30 ஆயிரம் பல்கலைக்கழகங்களை உள்ளடக்கிய வகையில் டைம்ஸ் கல்வி நிறுவனம் இந்த தரப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றது. 5 பிரிவுகளின் கீழ் இதற்கு புள்ளிகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி, கற்பித்தல் (கற்றல் சூழல்), ஆராய்ச்சி (தொகுதி, வருவாய் மற்றும் நற்பெயர்), மேற்கோள்கள் (ஆராய்ச்சி தாக்கம்), தொழில் வருவாய் (அறிவு பரிமாற்றம்) மற்றும் சர்வதேச பார்வை (பணியாளர்கள், மாணவர்கள்) போன்ற பல்கலைக்கழகங்களின் அடிப்படை செயல்பாடுகளை டைம்ஸ் உயர் கல்வியின் உலக தரவரிசையில் உள்ளடங்கும்.