July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக கொவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள வேண்டும்”; வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்!

கர்ப்பிணி தாய்மார்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என குடும்ப சுகாதார பணியகத்தின், விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

கர்ப்பிணி பெண் ஒருவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் போது சாதாரண நபரொருவர் தொற்றுக்குள்ளாவதை விடவும் அதிக சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் நோயிலிருந்து தம்மை பாதுகாக்க தடுப்பூசி ஏற்றிக் கொள்வது சிறந்த தீர்வு என விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா வலியுறுத்தினார்.

கொவிட் தொற்று ஆரம்பம் முதல் இதுவரை 5,500 கர்ப்பிணிப் பெண்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு, தொற்றுக்குள்ளான 40 கர்ப்பிணி தாய்மார்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிற நோய் நிலைமைகள் மற்றும் நாள்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.