July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

இலங்கையில் இன்று (07) தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,823 பேர் இன்று (07) இனங் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 70,722 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு நாட்டில் மேலும் 184 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

87 பெண்களும் 97 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 4 பேர் 30 வயதிற்கும் குறைந்தவர்கள் எனவும் 134 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் 46 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,504 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 72,124 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 88,278 ஆக உயர்வடைந்துள்ளது.