
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்துள்ளது.
அங்கொட, ஐடிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குளியாப்பிட்டியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இது வரையில் 6028 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 3561 பேர் குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.