January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கிழக்கு மாகாணத்தில் இருந்து மாலைதீவுக்கு மணல் ஏற்றப்படுகிறது”: சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இருந்து மாலைதீவுக்கு மணல் கொண்டு செல்லப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த மணல் வியாபரத்துடன் அரசாங்கத்திலுள்ள அரசியல்வாதிகள் இருவர் தொடர்புபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே சாணக்கியன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மாலைதீவில் அமைக்கப்படும் தீவொன்றுக்காக இங்கிருந்து மணல் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் இலங்கைக்கு டொலர் கிடைக்குமாக இருந்தால் அதில் பிரச்சனை இல்லை. ஆனால் அதன்மூலம்’ நாட்டுக்கு எந்த லாபமும் கிடைக்கப் போவதில்லை என்று சாணக்கியன்சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரும் சட்டத்தை செயற்படுத்துவதாக தெரியவில்லை என்றும், இதனால் இதற்கு தீர்வு காணுமாறு சபாநாயகரை கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.