January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்விக்கான தேசிய ஒளிபரப்பு மையம் திறந்து வைப்பு

தொலைக்காட்சி மூலம் பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் அரசின் திட்டத்தின் கீழ் இன்று முதலாவது தேசிய ஒளிபரப்பு மையம் கல்வி அமைச்சில் ஆரம்பிக்க வைக்கப்பட்டது.

இதனை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தொடங்கி வைத்தார்.

இந்த ஒளிபரப்பு மையம் நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் அதிவேக இணைய வசதியுடன் நிறுவப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய கல்வி நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அனைத்து பாடங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளையும் பாடத்திட்டத்தை உள்ளடக்கிய உயர்தர தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கு சரியான நேரத்தில் அனுப்பும் பணியை ஒளிபரப்பு மையம் மேற்கொள்கின்றது.

அத்தோடு ‘நெணச’ கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளின் புதிய இரண்டும் அலைவரிசைகள் (எண் 22 மற்றும் 25) இன்று கல்வி அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இதன்படி கல்வி தொலைக்காட்சி அலைவரிசைகளின் எண்ணிக்கை  நான்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இணைய வசதிகள் இல்லாத மாணவர்களுக்கு கல்வி கற்க உதவும் வகையில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம், கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவின் முன்மொழிவுக்கு அமைய நிறுவப்பட்டது,

டயலொக் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு தொடக்கம் செய்மதி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி ‘நெணச’ எனும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியது.

இந்த திட்டத்தின் ஊடாக கிட்டத்தட்ட 2,200 பாடசாலைகளுக்கு தொலைக்காட்சிகள் மற்றும் டயலொக் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் ஆம் திகதி தொடக்கம் மொத்த அலைவரிசைகளின் எண்ணிக்கையை 10 ஆக அதிகரிப்பதற்கும், டயலொக் நிறுவனம் உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

This slideshow requires JavaScript.