தற்போதைய சூழ்நிலையில் பாடசாலைகளை மீண்டும் திறக்க எந்த திட்டமும் இல்லை என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் கட்டம் கட்டமாக பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை செயல்பாடுகள் தொடர்பான செயலாளர் எல்.எம்.டி தர்மசேன அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்தார்.
இந்நிலையிலேயே கொழும்பில் இன்று (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக கொவிட் தொற்று பரவலுடன் நாட்டில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைந்துள்ளன.
இதேவேளை, தற்போது 20 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.