வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் இடைக்கால தொழில்நுட்பக் குழுவில் இருந்து விலகுவதாக எடுத்துள்ள முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய, பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இந்த தகவலை தெரிவித்தார்.
“கொவிட் -19 தொற்று நோய்க்கு எதிரான போரில் தனது ஆதரவையும் ஆலோசனையையும் அளிக்கும் முக்கிய வைத்திய நிபுணர்களில் ஆனந்த விஜேவிக்ரமவும் ஒருவர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“பதவி விலகுவதற்கான அவரது முடிவு, நாட்டின் கொவிட் தொற்றுக்கு எதிரான முயற்சியை மோசமாக பாதிக்கும்” என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வலியுறுத்தினார்.
எனினும், பதவி விலகுவது வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரமவின் தனிப்பட்ட விருப்பம் என்பதால் அவரின் முடிவை மதிக்க வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.