முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்களுக்கு சந்தையில் பற்றாக்குறை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்களின் விலைகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்கள் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறுகையில்,
கொரோனா தொற்று காரணமாக உதிரிப் பாகங்கள் இறக்குமதி செய்வதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உதிரிப் பாகங்களின் விலைகள் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் உதிரிப் பாகங்களை இறக்குமதி செய்பவர்கள் தற்போதுள்ள உதிரிப் பாகங்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.