இலங்கைக்கு 4200 பசு மாடுகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்திற்காக வர்த்தக ரீதியான பால் பண்ணைகளை அமைப்பதற்கே, இவ்வாறு பசு மாடுகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பால் உற்பத்தியை மேற்கொள்வதற்காக 5 தனியார் துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவும், அதற்கான காணிகளை குத்தகை அடிப்படையில் வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியதாக விவசாய அமைச்சர் மகிந்தனந்த அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் இந்த தீர்மானம் மூலம் 2025 ஆம் ஆண்டாகும் போது இலங்கை பால் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் என்றும் பால்மா இறக்குமதியை நிறுத்த முடியும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு 722 மில்லியன் லீட்டர் பால் தேவையாக உள்ள நிலையில், 60 வீதமான பால்மா வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால் உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் முதலீட்டாளர்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.