June 17, 2025 12:22:19

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

லுணுகம்வெஹெர பகுதியில் நில அதிர்வு!

File Photo

இலங்கையின் ஹம்பாந்தோட்டை,  லுணுகம்வெஹெர பிரதேசத்தில் சிறியளவிலான நில அதிர்வொன்று பதிவாகியுள்ளது.

2.4 மெக்னிடியூட் அளவான நில அதிர்வு இவ்வாறு பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 10.38 மணியளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புவிச்சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் ஆராய்ந்து வருகின்றது.

சில வாரங்களுக்கு முன்னர் தனமல்வில பகுதியிலும் இதுபோன்ற நில அதிர்வு பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.