April 30, 2025 7:13:14

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் பெரிய வெங்காய இறக்குமதிக்கான வரி அதிகரிப்பு

இலங்கையில் பெரிய வெங்காய இறக்குமதிக்கான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்துக்கு 40 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெரிய வெங்காயத்துக்கான வரி அதிகரிப்பு இன்றில் இருந்து அமுலுக்கு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.