January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிலக்கண்ணி வெடி தடைச் சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி

இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளைச் தடைச் சட்டமூலத்தை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுதொடர்பாக சட்ட வரைஞரால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு, சட்டமா அதிபரின் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

1997 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி ஒஸ்லோ நகரில் இடம்பெற்ற ஆட்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைத் தடை செய்தல் தொடர்பான இராஜதந்திர மாநாட்டில், ஆட்களை அழிக்கும் நிலக்கண்ணி வெடிகளைப் பயன்படுத்தல், வைத்திருத்தல், உற்பத்தி செய்தல் மற்றும் இடமாற்றம் செய்தல் போன்றவற்றை தடை செய்தல் மற்றும் அவற்றை அழித்தல் தொடர்பான சமவாயத்தில் இலங்கையும் இணைந்துகொண்டது.

அதற்கமைய, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி இலங்கையில் குறித்த உடன்படிக்கை அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், அதற்காக சட்டத்தை வகுப்பதற்கான பொறுப்பு இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.