வெலிக்கடை சிறைச்சாலை வளாகத்தில் முதலீட்டுத் திட்டங்களை முன்னெடுக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையை மில்லேவயில் நிர்மாணிக்கப்படும் சிறைச்சாலைக் கட்டடத் தொகுதிக்கு மாற்றுவதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
ஹொரன- மில்லேவ பகுதியில் 200 ஏக்கர் பரப்பில் நிர்மாணிக்கப்படும் புதிய சிறைச்சாலை தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலை மில்லேவயிற்கு இடமாற்றப்படும் போது, பெண் கைதிகளின் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்யுமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
30 பில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் புதிய சிறைச்சாலையின் நிர்மாணப் பணிகள் 2024 ஆம் ஆண்டில் நிறைவடையவுள்ளன.
வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள வளாகத்தில் ஹோட்டல் உட்பட பல்வேறு முதலீட்டுத் திட்டங்களுக்கும் இடம் வழங்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையின் 40 ஏக்கர் வரையிலான பரப்பில் புதிய முதலீட்டுத் திட்டங்களுக்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.