
வவுனியாவில் கடற்படை பஸ்ஸுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்கு உள்ளானதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து ஈரப்பெரியகுளம் நோக்கி குறித்த இளைஞன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள், ஈரப்பெரியகுளம் சந்திக்கருகில் மதவாச்சியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த கடற்படை பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் ஈரப்பெரியகுளம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளான்.
உயிரிழந்தவரின் சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸ் முன்னெடுத்து வருகின்றனர்.