
யாழ்ப்பாணத்தில் தமது சொந்த இடங்களில் இன்னும் மீள்குடியேறாத குடும்பங்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
இதன்படி முப்படையினர் மற்றும் பொலிஸாரின் பாவனை காரணமாக இதுவரை தமது காணிகளில் மீளக்குடியமராத குடும்பங்கள், தங்களுடைய விபரங்களை செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை பலாலி விமான நிலைய அபிவிருத்தியின் போது காணி சுவீகரிப்புக்குள்ளான காணி உரிமையாளர்களின் விபரங்களையும் குறிப்பிடப்பட்ட நடைமுறைகளுக்கமைவாக அனுப்பி வைக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விண்ணப்ஙகள் உள்ளிட்ட மேலதிக விபரங்களை யாழ். மாவட்ட செயலகத்தின் www.jaffna.dist.gov.lk எனும் இணையத்தளத்தில் பார்வையிடமுடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.