இலங்கையில் நிலவும் கொவிட் தொற்று நிலைமையால், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுஅத்தியாவசியமான இருதய சத்திரசிகிச்சை மாத்திரமே இடம்பெறுவதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் குமார விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது இருதய சத்திரசிகிச்சை செய்துகொள்வதற்காக 6,000 இற்கும் மேற்பட்டோர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர்.
தற்போது நாட்டில் நிலவும் நிலைமையால் சத்திரசிகிச்சை நடவடிக்கைகள் தாமதமாகவே நடக்கின்றன. வாரத்திற்கு 25 சத்திரசிகிச்சைகள் நடைபெறும் நிலையில் தற்போது வாரத்திற்கு 5 சத்திரசிகிச்சையாக அது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை தற்போதைய நிலைமையில், எவரேனும் இருதய சத்திரசிகிச்சைக்காக இந்த வருடத்தில் காத்திருப்பு பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டால், அவருக்கான சத்திரசிகிச்சை 2023 ஆம் ஆண்டுக்கு பின்னரே நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.