January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொவிட் நோய் கட்டுப்பாடு குறித்த மருத்துவ குழுவிலிருந்து விசேட வைத்திய நிபுணர் விலகல்!

கொவிட் கட்டுப்பாடு தொழில்நுட்ப மருத்துவக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து விசேட வைத்திய நிபுணர்  விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையின், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம இவ்வாறு விலகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம மின்னஞ்சல் மூலம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

கொவிட் நோய் கட்டுப்பாடு குறித்து தொழில்நுட்ப  மருத்துவக் குழுவால் எடுக்கப்பட்ட சில முடிவுகளுடன் தமக்கு உடன்பாடு இல்லாததன் காரணமாக வைத்திய நிபுணர்   குறித்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன.