
இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் 100 வீதம் தடுப்பூசி வழங்குவது பல்வேறு காரணங்களினாலும் சாத்தியம் இல்லாமல் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நடத்திய ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையினர் வீட்டுக்கு வீடு செல்வதன் மூலமே 100 வீத தடுப்பூசி வழங்கலை உறுதிப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பல்வேறு தவறான புரிதல்கள் காரணமாக மக்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ள வருவதில்லை என்று ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு வீடு சென்று தடுப்பூசி வழங்குவது சிரமமாக இருந்தாலும், வேறு வழியில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசிகளை வலுக்கட்டாயமாக வழங்க முடியாது என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.