July 2, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்த ஐ.தே.க.வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்”; ஹரின் பெர்னாண்டோ

ஐக்கிய தேசியக் கட்சியின் 75 வது ஆண்டு நிறைவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“எனக்கு அரசியல் கற்றுக் கொடுத்த ஐ.தே.க.வுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என தமது பதிவில் ஹரின் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னைய தலைவர்களின் கூற்றுக்களை நினைவு கூர்ந்துள்ள அவர் ஐ.தே.க தமது 75 வது ஆண்டில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அடுத்த கட்டத்தை எவ்வாறு ஆரம்பிப்பது என்பது குறித்து ஐ.தே.க முடிவு செய்ய வேண்டும் எனவும் ஹரின் குறிப்பிட்டுள்ளார்.

நான் இன்று என்ன சொல்கிறேன் என்று நம்புகிறேன், யூ.என்.பி. 75 க்கு ஆல் அவுட் ஆகும்.

அவர்கள் தங்கள் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கத் தயாரா என்பதை அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் ஹரின் கூறியுள்ளார்.

1946 செப்டம்பர் 6 ஆம் திகதியன்று அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் அதிக காலம் நாட்டை ஆட்சி செய்த முக்கிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி 75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகின்றது.