யாழ்ப்பாணம் – நெல்லியடி பகுதியில் கொவிட்-19 தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பண உதவி வழங்கிய குற்றச் சாட்டில் மூவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றையதினம் வதிரி, இரும்பு மதவடி பகுதியில் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்தப் பண உதவி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நூற்றுக் கணக்கானோர் வரிசையில் திரண்டனர்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த நெல்லியடி பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து, அங்கு கூடியிருந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இந்த உதவிகளை வழங்க முன்வந்த மூவரை பொலிஸார் கைது செய்து, பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2000 ரூபா வீதம் சுமார் 500 பேருக்கு இந்த உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.