நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்கள் மற்றும் கொழும்பு மெனிங் சந்தை ஆகியன எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், குறித்த தினங்களில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்பட்டன.
எனினும்,கடந்த இரண்டு வாரங்களாக மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம் விசேட பொருளாதார மத்திய நிலையங்களை இரண்டு நாட்கள் மாத்திரம் திறக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.