இலங்கை, இந்தியா உட்பட 10 நாடுகள் மீதான பயணத் தடையை நீக்க பிலிப்பைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பல்வேறு நாடுகள் மீதும் பிலிப்பைன்ஸ் பயணத் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், 10 நாடுகள் மீதான தடையை நீக்குவதற்கு அந்நாட்டு கொரோனா தடுப்புப் பிரிவு முன்வைத்த பரிந்துரைகளை ஜனாதிபதி ரொட்ரிகோ டியுடர்ட் அங்கீகரித்துள்ளார்.
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் பங்களாதேஷ், நேபாளம், துபாய், ஓமான், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் மீதான பயணத் தடை அடுத்த வாரம் நீக்கப்படவுள்ளது.
குறித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் பொருத்தமான நுழைவு, பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.