January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நாட்டு நலனுக்காக ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார்’: ரணில்

இலங்கையை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்படத் தயார் என்று பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் 75 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் உரையாற்றும் போதே, ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

பழைய ஐக்கிய தேசியக் கட்சி இப்போது இல்லை என்றும் இன்று புதியதோர் ஐக்கிய தேசியக் கட்சி காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்கள் ஐக்கிய தேசியக் கட்சியிடம் இருப்பதாகவும் ரணில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியை மீளக் கட்டியெழுப்பும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இளைஞர்கள் இணைந்துகொள்ள வேண்டும் என்றும் ரணில் அழைப்பு விடுத்துள்ளார்.