நியூசிலாந்தில் இலங்கையர் ஒருவர் தொடர்புபட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தமது கண்டனத்தை தெரிவிப்பதாக அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து தாக்குதல் சம்பவம் தொடர்பில், பாராளுமன்றத்தில் இன்று விசேட கூற்றை முன்வைத்து அமைச்சர் கண்டனத்தை வெளியிட்டார்.
”நியூசிலாந்தில் இ டம்பெற்ற கொடூரமான தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதி எமது நாட்டில் பிறந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. கவலைக்குரிய இந்த கொடூரமான செயற்பாட்டை நாங்கள் கண்டிக்கின்றோம்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதேவேளை பயங்கரவாதத்தின் தன்மையை அடையாளம் கண்டு நடவடிக்கையெடுப்பதற்கான சந்தர்ப்பம் சர்வதேசத்தின் ஊடாக மீண்டும் உருவாகியுள்ளது என்றும் இதன்போது அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.