
அமெரிக்காவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட மேலும் தொகை ‘பைசர்’ தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்துள்ளன.
அதன்படி, 92.430 பைசர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவை பாதுகாப்பாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ஏற்கனவே இலங்கைக்கு 8 இலட்சம் வரையான பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைத்துள்ளன.
இதேவேளை இன்று முதல் நாட்டில் 20 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்கவே நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.