
இலங்கையின் பிரபல பாடகரும் ஜிப்ஸீச் இசைக்குழுவின் தலைவருமான சுனில் பெரேரா காலமானார்.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர், இன்று தனது 68 வயதில் காலமாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சில வாரங்களுக்கு முன்னர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுனில் பெரேரா, சில தினங்களுக்கு முன்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பியிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, சிகிச்சைப் பலனின்றி காலமாகியுள்ளார்.
சுனில் பெரேராவின் மறைவு சிங்கள இசைத்துறைக்கு பேரிழப்பாகும். இவரின் மறைவு குறித்து அரசியல் தலைவர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.