January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாற்று தடுப்பூசி ஒன்றை 3 வது தடுப்பூசியாக வழங்குமாறு வைத்திய நிபுணர் கோரிக்கை

இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாற்று தடுப்பூசி ஒன்றை 3 வது தடுப்பூசியாக வழங்குமாறு மருத்துவ சங்கத்தின் வைத்தியர் நிபுணர் ராஜீவ் டி சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.

2 டோஸ் சினோபார்ம் தடுப்பூசிகளை எடுத்துக் கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர், அஸ்ட்ரா செனேகா, மொடர்னா ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பூஸ்டர் டோஸாக வழங்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 டோஸ் சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்தும் தினசரி உயிரிழப்பவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களே அதிகமாக உள்ளனர்.

இதுவரை நாட்டில் பதிவான உயிரிழப்புகளில் 76.04 வீதமானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.