July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்தது!

இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 10,000 ஐ கடந்து பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று (04) 189 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதை அடுத்து இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

93 பெண்களும் 96 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு நாட்டில் கொவிட் உயிரிழப்பு வீதம் 2.2 ஆகவும் குணமடையும் வீதம் 83.2 ஆகவும் உள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2,564 பேர் இன்று (05) இனங் காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு இன்று மாலை 5.45 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 62,023ஆக அதிகரித்துள்ளது.

இவ்வாறு தொற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 69 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் 31 வீதமானவர்கள் பெண்கள் எனவும் ஜனாதிபதி அலுவலகத்தின் கொரோனா தரவுகள் தெரிவிக்கின்றன.

இதுவரை நாட்டில் உயிரிழந்துள்ளவர்களில் 43 வீதமானவர்கள் பெண்கள் எனவும் 57 வீதமானவர்கள் எனவும் தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதனிடையே நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 67,515 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 3 இலட்சத்து 84,557 ஆக உயர்வடைந்துள்ளது.