November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை குறைந்த விலையில் விற்க உத்தரவு!

File Photo

சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தி வைத்துள்ள அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு சலுகை விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் செனரத் நிவுன்ஹெல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர், அனைத்து மாவட்ட அரசாங்க அதிபர்கள், நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் மற்றும் உணவு ஆணையாளர் உள்ளிட்டோருக்கு அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ள அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர், நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மறைத்து வைத்தல், அதிக விலைக்கு விற்பனை செய்தல் மற்றும் பொதுமக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குதல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன்படி அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட விலை அல்லது சுங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட விலைக்கு அந்த பொருட்களை பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.