January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நியூசிலாந்து தாக்குதல்தாரியுடன் தொடர்பு வைத்திருந்த நண்பர்களிடம் சிஐடி விசாரணை

நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஆறு பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் மேலதிக தகவல்களை பெறுவதற்காக அவரது நண்பர்களிடம் விசாரணை செய்து வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, குறித்த நபருடன் தொடர்பை வைத்திருந்த 3 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (03) ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய இலங்கையரான மொஹமட் சம்சுதீன் ஆதில் என்ற 32 வயதுடைய  சந்தேகநபர், ஒக்லாந்து நகரிலுள்ள பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்து அங்கிருந்த பலர் மீது கத்திக்குத்து தாக்குதலை  முன்னெடுத்த போது, ஆறு பேர் காயமடைந்தனர்.

எனினும், நியுசிலாந்து பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில், சம்பவ இடத்திலேயே இவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

காத்தான்குடி பகுதியை சேர்ந்த குறித்த நபர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.