November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

Vaccinating Common Image

இலங்கையில் 20 முதல் 29 வயதுக்கு இடைப்பட்டவர்களுடக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் நாளை முதல் பல இடங்களில் குறிப்பிட்ட வயதுப் பிரிவினருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி கொழும்பில் தடுப்பூசி செலுத்தும் நிலையங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட 6 தடுப்பூசி மையங்களில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என கொழும்பு மாநகர சபையின் பிராந்திய தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் தினுக குருகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சுகததாச விளையாட்டரங்கு, ஜிந்துப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், போர்ப்ஸ் வீதியில் அமைந்துள்ள பொதுநோக்கு மண்டபம், கெம்பல் பூங்கா, நாரஹென்பிட்டி ஷாலிகா மண்டபம் மற்றும் வௌ்ளவத்தை ரொக்ஸி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி நிலையங்களுக்கு சென்று குறிப்பிட்ட வயதுப் பிரிவினர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம்.

இதன்போது, சினோபார்ம் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக வைத்தியர் தினுக குருகே தெரிவித்துள்ளார்.