July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வடக்குக் கடலில் 68 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

இலங்கையின் வடக்குக் கடற்பரப்பில் 227 கிலோவிற்கும் அதிக நிறையுடைய கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது, கைவிடப்பட்டிருந்த படகொன்றில் இருந்து கஞ்சா பொதிகளை மீட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி 68 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும் என்று கடற்படையினர் கூறுகின்றனர்.

குறித்த படகில் வந்தவர்கள் இலங்கைக்கு அதனை கடத்தி வர முயன்றிருக்கலாம் என்றும், கரைக்கு கொன்டுவர முடியாது கடத்தல் காரர்கள் அதனை அந்தப் படகுடன் கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்றும் கடற்படையினர் தெரிவிக்கிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இதேவேளை கைப்பற்றப்பட்ட கஞ்சாவை கரையில் எரித்து அழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

This slideshow requires JavaScript.