இலங்கையின் கிழக்கு கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கல்முனை பிராந்திய கடலில் மிகப் பெரிய மீன்கள் பிடிபட்டுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 4 பாரிய சுறா மற்றும் திருக்கை போன்ற மீன்கள் தூண்டில் மூலம் பிடிக்கப்பட்டு 8 இலட்சம் ரூபா ரையான விலைக்கு விற்கப்பட்டுள்ளன.
அதேபோல இன்றைய தினமும் 12 அடி நீளமான கொப்புறா மீன் ஒன்றும் அப்பகுதி மீனவர்கள் பிடித்துள்ளனர்.
குறித்த கொப்பறா மீனின் பெறுமதி சுமார் மூன்று இலட்சம் ரூபா எனவும் குறித்த மீனவரின் வலையில் சுமார் 50 கிலோ கிராம் எடையுள்ள திருக்கை இன மீன் ஒன்றும் பிடிபட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும், அவர்களால் பிடிக்கப்பட்ட மீன்களை சுகாதார சட்ட விதிமுறைகளை பின்பற்றி விற்பனை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட போதிலும், தடைகள் இன்றி மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.