November 25, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒக்சிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

இலங்கையில் ஒக்சிஜன் தேவைப்படும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கின் மூலம் கொவிட் பரவல் கட்டுப்பாட்டு நடவடிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஒட்சிஜனில் தங்கியிருக்கும் நோயாளர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்களவு குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்தியாவின் ‘லைப்லைன்’ திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு மேலும் 150 டொன் மருத்துவ ஒட்சிஜன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஒட்சிஜன் கொள்கலன்களுடன் இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு இன்று வந்துள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.