
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று காலை நடைபெற்றது.
நாட்டில் நிலவும் கொவிட் தொற்றுப் பரவல் சூழ்நிலை காரணமாக மட்டுப்படுத்த எண்ணிக்கையிலானோரின் பங்குபற்றுதலுடன் தேர் உள்வீதியில் வலம் வந்தது.
இன்றைய தினம் விசேட பூஜை வழிபாடு, வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து அந்தணர்களின் வேதங்கள் ஒலிக்க காலை 7 மணியளவில் தேர்த் திருவிழா ஆரம்பமானது.
வழமையாக நல்லூர் தேர்த் திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்ற நிலையில் இம்முறை கொரோனா மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக, குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோருக்கு மட்டுமே ஆலய வளாகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இணையவழி மற்றும் தொலைக்காட்சி ஊடாக தேர்த் திருவிழா நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில் வீடுகளில் இருந்தவாறு பக்கத்தர்கள் நல்லூர் கந்தனை தரிசித்தனர்.