May 27, 2025 17:41:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சீனாவில் இருந்து பெருமளவு தடுப்பூசிகள் இலங்கை வந்தன!

சீனாவில் இருந்து 4 மில்லியன் டோஸ் ‘சினோபார்ம்’ தடுப்பூசிகள் இலங்கை வந்தன.

ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் மூலம் இந்த தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் இந்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இதன்படி இலங்கைக்கு ஒரே தடவையில் அனுப்பி வைக்கப்பட்ட அதிகளவிலான தடுப்பூசி தொகை இதுவாகும்.

இது வரையில் இலங்கைக்கு சீனாவில் இருந்து 26 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.