
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று நடைபெறுகின்றது.
ஆகஸ்ட் 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா ஆரம்பமானதுடன், இன்று தேர்த் திருவிழா இடம்பெறுகின்றது.
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு சுகாதார ஒழுங்குவிதிகளுடன் திருவிழா நடைபெறுகின்றது.
இதன்படி மட்டுப்படுத்த எண்ணிக்கையிலானோருடன் இன்று தேர்த் திருவிழா இடம்பெற்று வருகின்றது.