June 1, 2025 11:00:01

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை ஆதிவாசிகள் தலைவரின் மனைவி காலமானார்

இலங்கை ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னிலத்தோவின் மனைவி ஊருவரிகே ஹீன் மெனிக்கே காலமானார்.

மஹியங்கனை – தம்பானே ஆதிவாசிகள் கிராமம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் உள்ள 115 பேருக்கு கடந்த 27 ஆம் திகதி  நடத்தப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 44 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மஹியங்கனை மருத்துவமனையின் கொரோனா  சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் ஆதிவாசிகள் சமூகத்தின் தலைவர் ஊருவரிகே வன்னிலத்தோவின் மனைவியும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.