வடக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்த 52 பேரின் சடலங்கள் சுகாதார கட்டுப்பாடுகளின் கீழ் தகனம் செய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக சுகாதார துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவற்றில் யாழ்ப்பாணத்திலிருந்து 3 சடலங்கள் ஹிக்குரவைக்கும் கிளிநொச்சியிலிருந்து 5 சடலங்கள் பொலனறுவைக்கும் கொண்டு செல்லப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் கொவிட்-19 நோயினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.யாழ்ப்பாணத்தில் 5 சடலங்களும் வவுனியாவில் 7 சடலங்களும் எரியூட்டப்படுகின்றன.எனினும் கொவிட்-19 நோயினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
அதனால் ரோக்கன் அடிப்படையில் மருத்துவமனைகளில் இருந்து சடலங்கள் பெறப்பட்டு மின் தகனம் செய்யப்படுகின்றன.எனினும் தேக்க நிலை காணப்படுவதால் உறவினர்களிடம் ஒப்புதல் பெற்று மாகாணத்துக்கு வெளியில் சடலங்களை அனுப்பி எரியூட்டும் நிலை ஏற்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.